மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஊதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு?

ஊதிய உயர்வு: யாருக்கு எவ்வளவு?

ஏழாவது ஊதியக்குழுவின் ஊதிய உயர்வு குறித்த பட்டியலை கிரேடு வாரியாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, அலுவலக உதவியாளர்களின் ஊதியம் ரூ.21,792இல் இருந்து ரூ.4,928 அதிகரித்து ரூ.26,720 ஆக உயர்ந்துள்ளது. இளநிலை உதவியாளர் ஊதியம் ரூ.37,936இல் இருந்து ரூ.9,549 அதிகரித்து ரூ.47,485 ஆக அதிகரித்துள்ளது. இடைநிலை ஆசிரியர் ஊதியம் ரூ.40,650இல் இருந்து ரூ.50,740 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆய்வாளர்களுக்கான ஊதியம் ரூ.69,184இல் இருந்து ரூ.15,716 அதிகரித்து ரூ.84,900 ஆக உயர்ந்துள்ளது.

துணை ஆட்சியருக்கான ஊதியம் ரூ.81,190இல் இருந்து ரூ.17,755 அதிகரித்து ரூ.98,945 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பார்வைக் குறைபாடு, மாற்றுத்திறனாளி, காதுகேளாதோரின் ஊர்திப்படி ரூ.2,500 ஆக உயர்வு. இளநிலை உதவியாளர் ஊதியம் ரூ.37,936இல் இருந்து ரூ.47,485 ஆக அதிகரிப்பு.

சத்துணவு அமைப்பாளர்கள் ஊதியம் ரூ.10,810லிருந்து ரூ.2,910 அதிகரித்து ரூ.13,720 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சத்துணவு சமையலர் ஊதியம் ரூ.6,562இல் இருந்து ரூ.2,118 அதிகரித்து ரூ.8,680 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர், கிராம பஞ்சாயத்து செயலாளர் ஆகியோருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.1,500இல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon