மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

அண்ணாதுரை: சாதுவான ரவுடி!

அண்ணாதுரை: சாதுவான ரவுடி!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, நடிகராக பல படங்களில் நடித்து வெற்றிகண்டவர் விஜய் ஆண்டனி. ஒவ்வொரு படத்தையும் நன்கு தேர்வு செய்து நடிகராக வெற்றிபெற்று வருவதோடு, வணிகரீதியாக வெற்றி பெறும் படங்களையும் தயாரித்து, நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. இதன் ட்ரெய்லரை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்.11) மாலை வெளியிட்டார்.

தமிழில் ‘அண்ணாதுரை’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரிலும் வெளிவரவுள்ள இதில் சாதுவான ஆசிரியர், ரவுடித்தனமான குடிகாரர் என்ற இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதில் டயானா ஷம்பிகா நாயகியாக நடித்துள்ளார். மேலும் மகிமா, ஜ்வேல் மேரி, ராதா ரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுசீந்திரன் உதவியாளர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இதில், தில் ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இசையமைத்தோடு எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார் விஜய் ஆண்டனி. ராதிகாவின் R studios நிறுவனமும், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படப்பிடிப்புகள் முடிவடைந்து மற்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தை டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அண்ணாதுரை ட்ரெய்லர்

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon