மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

உடற்பயிற்சிகள் - ஹெல்த் ஹேமா

உடற்பயிற்சிகள் -  ஹெல்த் ஹேமா

மன ஆரோக்கியம் மிக நன்றாக இருந்தாலும், உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்க வேண்டும். வீட்டு வேலைகளே சின்னசின்ன உடற்பயிற்சிகள்தான். இருப்பினும் தற்போதெல்லாம் வீட்டு வேலைகளுக்குக்கூட ஆட்கள் வைத்து செய்வதும் துவைக்க, காயவைக்க, அரைக்க, சமைக்க என அதிகமாக செயற்கை கருவிகளே செயல்படுகின்றன. எதுவாகினும் இந்த உடற்பயிற்சிகளை அவசியம் மேற்கொள்ளுதல் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை பயக்கும்.

அசைவியக்கப் பயிற்சிகள் (Aerobic Exercises)

இத்தகைய பயிற்சியை நீங்கள் வேகமாகச் செய்வதானால் வாரத்துக்கு 75 நிமிடங்கள் செய்ய வேண்டும். (ஓடுதல், சீரான துள்ளோட்டம் Jogging, வேகமான நீச்சல், கால்பந்தாட்டம், ஹாக்கி, தனி டென்னிஸ், தற்காப்பு கலைகள் (martial arts), வேகமான நடனம் போன்றவை) ஆனால், நடுத்தர வேகத்தில் (வேகமான நடை, நீச்சல், கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இரட்டையர் டென்னிஸ், சைக்கிள் ஓட்டம் போன்றவை) செய்வதானால் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஓரிரு நாள்களில் அத்தனை பயிற்சியையும் செய்து முடிப்பதைவிட வாரத்தில் 5 முதல் 7 நாள்களுக்கும் பிரித்துச் செய்வது நல்லது. கடுமையானது மற்றும் நடுத்தரமானது ஆகிய இரண்டையும் கலந்து செய்பவர்களும் உண்டு.

தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் (Strength training)

இவற்றை வாரத்தில் இரண்டு நாள்களுக்காவது செய்ய வேண்டும். உதாரணமாக எடை தூக்குதல், மலை ஏறுதல், கொத்துதல் போன்ற கடுமையான தோட்ட வேலை, உடற்பயிற்சி இயந்திரங்களில் பயிற்சி போன்றவை. யோகாசனமும் இவ்வகையைச் சேர்ந்ததே.

எனவே, சிறிய அளவிலான உடற்பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். ரத்த கொதிப்பு, கொலஸ்ட்ரால், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும். எடையைக் குறைக்க விரும்பினால் பயிற்சிகளை வாரத்தில் 300 நிமிடங்களாவது செய்ய வேண்டும். அதாவது சராசரியாக தினசரி 45 நிமிடங்கள் தேவைப்படும்.

உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக அமைத்துக்கொண்டு சீரான வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.

ஹெல்த் ஹேமா 01

ஹெல்த் ஹேமா 02

ஹெல்த் ஹேமா 03

ஹெல்த் ஹேமா 04

ஹெல்த் ஹேமா 05

ஹெல்த் ஹேமா 06

ஹெல்த் ஹேமா 07

ஹெல்த் ஹேமா 08

ஹெல்த் ஹேமா 09

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon