மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

இங்கிலாந்தில் 1965ஆம் ஆண்டு பிறந்தவர் ஜே.கே.ரவுலிங். நாவலாசிரியர், திரைக்கதை ஆசிரியர். இவர் எழுதிய ஹாரி பாட்டர் நாவல் உலகம் முழுக்க பிரபலமானது. 400 மில்லியன் பிரதிகள் விற்று தீர்ந்துள்ளன. அதை தழுவி வந்த படங்களும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. ரவுலிங் திரைக்கதை எழுதுவதோடு திரைப்படங்களைத் தயாரித்தும் வருகிறார். இவரது பிரபலமான மேற்கோள் ஒன்று உண்டு.

“உங்களில் யாரும் நான் சந்தித்த அளவுக்கு மோசமான தோல்விகளைச் சந்திக்கப் போவதில்லை. ஆனாலும் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அவை வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம்.”

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon