மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

முருங்கைக்காய் தக்காளி தொக்கு - கிச்சன் கீர்த்தனா

முருங்கைக்காய் தக்காளி தொக்கு -  கிச்சன் கீர்த்தனா

மாங்காய், முருங்கைக்காய் காம்பினேஷன் எவ்வளவு தேவாமிருதமாக இருக்குமோ அதற்கு அடுத்தபடியாக ஜோடி சேர்ந்து சுவையூட்டுவது முருங்கைக்காயுடன் சேர்ந்த தக்காளியுடனான அனைத்து சமையல்களும். அவற்றில் மிகவும் எளிதான செய்முறை கொண்ட “முருங்கைக்காய் தக்காளி தொக்கு” மிகவும் சுவையானது. செய்வோமா?

தேவையானவை:

முருங்கைக்காய் - 5, வெங்காயம் – 2, தக்காளி – 3, கறிவேப்பிலை –சிறிதளவு, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக்காயைப் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காயை வேக விடவும். காய் நன்றாக வெந்தவுடன் ஆறவைத்து சதை பகுதியினை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

இத்துடன் முருங்கைக்காய் வேகவைத்த தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன் எடுத்து வைத்துள்ள முருங்கைக்காய் சதை பகுதியைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.

முருங்கைக்காய் அவ்வளவாக விலையேற்றமில்லை. தக்காளிதான் தடபுடலான விற்பனையாகவும் சில நேரங்களில் இரண்டு கிலோ பத்து ரூபாய்க்கும் கிடைக்கிறது. சூழல் பொறுத்து ஜோடி சேர்த்து சமைத்து சுவை காண்போம்

கீர்த்தனா கெத்து

டவுன் பஸ்கூட வராத ஊருக்குள்ள ஜியோ சிக்னல் வருது. #அம்பானிடா

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

கிச்சன் கீர்த்தனா 03

கிச்சன் கீர்த்தனா 04

கிச்சன் கீர்த்தனா 05

கிச்சன் கீர்த்தனா 06

கிச்சன் கீர்த்தனா 07

கிச்சன் கீர்த்தனா 08

கிச்சன் கீர்த்தனா 09

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon