மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

உர மானியம்: நேரடி பயன் பரிமாற்றத் திட்டம்!

உர மானியம்: நேரடி பயன் பரிமாற்றத் திட்டம்!

உர மானியங்கள் வழங்க நேரடி பயன் பரிமாற்றம் (டி.பி.டி) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உர அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “முதல்கட்டமாக டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த மாதத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இரண்டாம்கட்டமாக பஞ்சாப், மத்தியப்பிரதேசம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட 12 பெரிய மாநிலங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு குறைந்தவிலையில் உரங்கள் வழங்க ரூ.70,000 கோடியை மானியமாக ஆண்டொன்றுக்கு மத்திய அரசு செலவிடுகிறது. இதற்கு முன்னர் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு நேரடி பயன் பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தொடர்ந்து மானிய விலையில் உரங்களைப் பெறலாம். அரசாங்கம் நேரடியாக நிறுவனங்களுக்கு மானியத் தொகையை செலுத்தும்” என்று கூறியுள்ளது.

உர மானியத்துக்கான இந்த நேரடி பயன் பரிமாற்றத் திட்டமானது முதற்கட்டமாக மிசோரம், நாகலாந்து, டெல்லி, புதுச்சேரி, கோவா, டையு & டாமன், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்தத் திட்டத்தைப் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon