மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

சிறப்புப் பார்வை: அமைதிக்கான நோபல் பரிசு - ஐ.சி.ஏ.என்!

சிறப்புப் பார்வை: அமைதிக்கான நோபல் பரிசு - ஐ.சி.ஏ.என்!

சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரசாரக் குழுவுக்கு (ஐ.சி.ஏ.என்) இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நோபல் பரிசுக் குழு தலைவர் பெரிட் ரீஸ்-ஆண்டர்சன் கூறுகையில், “அணு ஆயுதங்கள் மீதான, ஒப்பந்த தடையை உருவாக்க சிறப்பான களப்பணி ஆற்றியமைக்காக இந்த விருது” எனக் குறிப்பிட்டார்.

“அணு ஆயுதங்களின் பயன்பாடு ஆபத்தை ஏற்படுத்துமோ என்று கடந்த பல ஆண்டு காலமாக நமக்கு இல்லாத பயம், தற்போதைய காலகட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது” என அவர் தெரிவித்தார். அவர் வடகொரிய விவகாரத்தை மேற்கோள் காட்டினார்.

அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள், படிப்படியாக அணு ஆயுதங்களை அழிப்பது குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்காகப் போராடிவரும் தன்னார்வ அமைப்பான ஐ.சி.ஏ.என்னுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிப்பதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச அணு ஆயுதத் தடை இயக்கம் ஐ.சி.ஏ.என் 101 நாடுகளைச் சேர்ந்த 468 தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பு இது 2007 முதல் செயல்பட்டு வருகிறது.

இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐ.சி.ஏ.என். அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசுக் குழுத் தலைவர் பெரிட் ரைஸ் ஆன்டர்சன் வெளியிட்டுக் கூறியது

அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதால் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய பேரழிவு குறித்து தொடர்ந்து எச்சரித்து வருவதற்காக அது போன்ற பேரழிவு ஆயுதங்களைத் தடை செய்ய முற்படும் சர்வதேச ஒப்பந்தத்தைப் பல நாடுகள் ஏற்கச் செய்தமைக்காக இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐ.சி.ஏ.என். அமைப்புக்கு வழங்கப்படுகிறது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon