மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

ஜனாதிபதி தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!

ஜனாதிபதி தலைமையில் ஆளுநர்கள் மாநாடு!

மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (அக்டோபர் 12) தொடங்குகிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 48ஆவது ஆளுநர்கள் மாநாடு இன்று புது டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் தொடங்குகிறது. இந்த மாநாடு 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் 27 மாநில கவர்னர்கள், யூனியன் பிரதேசங்களின் 3 துணைநிலை கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் சிறப்பு உரையாற்றுகின்றனர். மாநாட்டின் முதல் அமர்வில் ‘புதிய இந்தியா 2022’–க்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ‘நிதி ஆயோக்’ வழங்கும் கருத்தாக்கமும் இடம்பெறுகிறது. இந்த மாநாட்டில் மாநிலங்களில் உயர்கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்பட மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். அதேபோல், முதன்முறையாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று மற்றும் நாளை குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ள ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon