மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

இந்தியாவுக்கு வெற்றி முகம்!

இந்தியாவுக்கு வெற்றி முகம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே இந்திய வீரர் சுனில் கோல் அடித்தார். அடுத்த நிமிடமே ஜப்பானும் கோல் அடித்து, 1-1 என சமன் செய்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் 22ஆவது நிமிடத்தில் லலித் உபாத்யாய் இரண்டாவது கோலை அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ரமண்தீப் சிங் 33ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடுத்து ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். பிறகு ஹர்மன்ப்ரீத் சிங் 35 மற்றும் 48 நிமிடத்திலும் தலா ஒரு கோல் வீதம் இரு கோல் அடித்தார். இதையடுத்து இந்திய அணி 5-1 என்கிற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. நாளை (அக்டோபர் 13) நடைபெறும் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon