மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

மேகா ஆகாஷின் தானாய் நீயாய்!

மேகா ஆகாஷின் தானாய் நீயாய்!

பாலாஜி தரணிதரனின் ஒரு பக்க கதை படத்தின் மூலமே திரையுலகில் அறிமுகமாக இருந்தவர் மேகா ஆகாஷ். ஆனால், அந்தப் படம் வெளியாகத் தாமதமானதோடு, தனுஷுடன் ஜோடி சேர்ந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படமும் தாமதமானது. இதனால் தெலுங்கில் கவனம் செலுத்தி மேகா, அங்கு நிதினிக்கு ஜோடியாக நடித்த லை (lie) படம் அவரை சினிமாவுலகில் அறிமுகம் செய்து வைத்தது. தற்போது ஒரு பக்க கதை படம் வெளிரவர இருக்கிறது. இந்தப் படத்தின் மெலடி பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ், மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸ் இப்படத்தின் மூலமே நடிகராக அறிமுகமாகவுள்ளார். இதன் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகி இருந்தது. ஆனால், தணிக்கை பிரச்னையால் ரிலீஸ் தாமதமானது. படத்துக்கு U சான்றிதழ் கிடைத்ததை அடுத்து படத்தின் மற்ற அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் இடம்பெறும் மெலடி டூயட் பாடல் ஒன்றை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 11) மாலை வெளியிட்டார்.

கோவிந்த மேனன் இசையில் உருவாகியுள்ள ‘தானாய் நீயாய்’ பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ஷான் ரோல்டன், ஆனந்தி ஜோஷி குரலில் வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் டூயட் மெலடி ரகமாய் இருக்கிறது. தானாய் நீயாய் எனத் தொடங்கும் இப்பாடலில்,

சங்கொன்றின் உள்ளிலே மெல்லோசை கேட்குமே...

என் உள்ளிலே உன் ஓசையே தாலாட்டுமே...

விண்மீனைப் போலவே நீயாக தோன்றினாய்...

கொண்டாடுதே கொண்டாடுதே பூலோகமே...

கருவறையை வருடிவிடும் மயிலிறகே...

மறுபடியும் பிறந்து விட்டேன் இது வரமே...

போன்ற வரிகள் முத்தாய்ப்பாய் இருக்கிறது. மெலடி பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம்பெறும் எனப் பாடலை கேட்கையில் நம்ப முடிகிறது. தனது முதல் படமென்பதால் வெற்றிப் படமாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கிறார் மேகா.

தானாய் நீயாய் லிரிக்கல் வீடியோ

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon