மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

கைது செய்ய ஆதார் கட்டாயம்!

கைது செய்ய ஆதார் கட்டாயம்!

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கேஸ், வங்கி கணக்கு, பேன் கார்டு, கைப்பேசி இணைப்புக்கு, மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு என்று எங்கும் எதிலும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்வதற்கும் ஆதார் தேவை என்ற நிலை வந்துள்ளது.

போலீஸார் ஒரு வழக்கு தொடர்பாக எவரையேனும் கைது செய்ய வேண்டுமென்றால்... அவரது ஆதார் அட்டை கட்டாயம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தமிழக காவல் துறை தலைமையில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது. கைது செய்ய வேண்டும் என்றால் குற்றவாளியின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல்களை அவசியம் இணைக்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை அடுத்து தமிழக காவல் துறை தலைமை உத்தரவு போட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, “குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஒருவர் மீதோ சிலர் மீதோ சந்தேகம் வந்தால் அவர்களைக் காவல் நிலையம் கூட்டிச் சென்று விசாரிப்போம். பின் அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவோம். இனி வரும் காலங்களில் அவ்வளவு எளிதில் கைதுசெய்ய முடியாது. குற்றவாளியின் ஆதார் அட்டை இல்லையென்றால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த முடியாது. ஆதார் அட்டை இல்லை என்றால் அவர் எத்தனை குற்றம் செய்தாலும் அவரைக் கைது செய்யவே முடியாதா என்ற கேள்வியும் ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்கள் தமிழகக் காவல் துறையினர்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon