மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ராஜினாமா பின்னணி!

தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ராஜினாமா பின்னணி!

தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞராக இருந்துவந்தவர் ராஜ ரத்தினம். இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் ஜூனியராகப் பணியாற்றினார்.

தற்போது டிடிவி தினகரன் மீதான அந்நியச்செலாவணி வழக்கில் ஆஜராகி வருகிறார். எம்.எல்.ஏ.க்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் முன்ஜாமீன் வழக்கிலும் வாதிட்டார்.

இந்நிலையில் இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பதவி ராஜினாமா தொடர்பாக தமிழக அரசுக்கு இன்று (அக்டோபர் 05) அவர் எழுதியுள்ள கடிதத்தில், சொந்தக் காரணங்களுக்காகப் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இவர், அரசின் தலைமைக் குற்றவியல் வழக்கறிஞராக, கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

அரசு சார்பில் பல்வேறு வழக்குகளில் வாதாடிய இவர், ஓராண்டுக்குப் பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசு ப்ளீடராக உள்ள எம்.கே.சுப்ரமணியமும் கூடுதல் வழக்கறிஞர்கள் ஒரு சிலரும், தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த முத்துக்குமாரசாமி உடல்நிலையைக் காரணம் காட்டி, அந்தப் பதவியிலிருந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி பதவி விலகினார்.

வழக்கறிஞராக இருந்த ராஜரத்தினம், தினகரன் தரப்பினரோடு அதிக நெருக்கம் கொண்டிருந்ததால் பதவியை ராஜினாமா செய்ய எடப்பாடி அணியினர் அழுத்தம், கொடுத்திருப்பார்கள் என்று வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon