மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

‘லவ்லி வாரிசு' கம்மிங் சூன்!

‘லவ்லி வாரிசு' கம்மிங் சூன்!

பாலசந்தரின் தில்லு முல்லு திரைப்படத்தில் தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லி விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதே செய்தியை கடந்த வருடமும் படித்திருப்பீர்கள். இந்த வருடத்தின் தொடக்கத்திலும் படித்திருப்பீர்கள். காரணம், அவையெல்லாம் விஜியின் மகள் லவ்லி எனப்படும் லவ்லின் நடிக்கத் தயாராகிவிட்டார் என தமிழ் சினிமா உலகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

கடந்த வருடம் லவ்லினின் நடிப்பு எண்ட்ரி குறித்து பேசிய விஜி, "லவ்லியின் அப்பாவைப் போலவே அவளும் பைலட் ஆகவேண்டும் என்பதே என் எண்ணம். ஆனால், நடிப்பில் ஆர்வம் இருப்பதாகச் சொன்னபிறகு நான் தடைபோட முடியாது. அனுபம் கெர் நடத்திவரும் நடிப்புப் பள்ளியில் மூன்று வருடம் பயின்று அடிப்படைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆனாலும், நடிப்பு என்பது ஒரு கலைஞன் தனக்குள் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியது என்பதால் சொந்தமாகவே பயிற்சி எடுத்துவருகிறார். வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கலாம். ஆனால், லவ்லியின் நடிப்பை நிறுத்த எனக்கு விருப்பமில்லாததால், துபாய்க்கும் இந்தியாவுக்கும் லவ்லின் பறந்து பறந்து படிப்பார் நடிப்பார்" என்று அறிவித்திருந்தார்.

விஜியின் அறிவிப்புக்குப்பின் தமிழ் சினிமா உலகில் அதிகம் தலைகாட்டாத லவ்லி, இப்போது Chillbreeze நடத்திய ஃபேஷன் ஷோவில் தலை காட்டியிருக்கிறார். சென்னை ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோ-வில், விஜி தனது மகள் லவ்லியுடன் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போதுதான் அவர் நடிப்பை தொடங்குவதற்காக சென்னை வந்திருப்பது தெரியவந்தது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon