மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு!

பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு!

பள்ளிகளில் வியாழன் தோறும் டெங்கு விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (அக்டோபர் 3) பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “பள்ளிகளில் காலை ப்ரேயர் முடிந்தவுடன் மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு கொசுக்கள், நன்னீரில் உற்பத்தியாகும் என்பதால், பள்ளி வளாகங்களில் நீர் தேங்காமல் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மூலம், பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். வியாழன் தோறும், பள்ளி மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளை சுத்தப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வெண்டும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., இளம் செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றின் மூலம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து, அருகிலுள்ள அரசு சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த உத்தரவுகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரமாக அதிகரித்து விட்டது. அதேபோல், உயிரிழந்தோரின் எண்ணிக்கை முப்பதிலிருந்து 90 ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று (அக்டோபர் 4) மாலையுடன் முடிவடைந்த 48 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon