மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

குழந்தை கடத்தல் : தம்பதியினருக்குச் சிறை!

குழந்தை கடத்தல் : தம்பதியினருக்குச் சிறை!

திருப்பதியில் ஆண் குழந்தையை கடத்திய தம்பதியினருக்கு சிறைத் தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டம், உருவகொண்டா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் தனது குடும்பத்துடன் கடந்த ஜூன்-13 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு அன்று இரவு கோயிலிலேயே உறங்கிய நிலையில் அருகில் படுக்க வைத்திருந்த 1 வயதுக் குழந்தை சென்னகேசவலுவை காணவில்லை. இதுகுறித்து திருமலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் வெங்கடேஷ் உறங்கிக் கொண்டிருந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் குழந்தையை மற்றொரு தம்பதியினர் எடுத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையை நாமக்கல் மாவட்டம் சிங்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக் – தங்காயி தம்பதியினர் கடத்தி சென்றது தெரியவந்தது. பின் அவர்களிடமிருந்து குழந்தையை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு இன்று (அக் 5) திருப்பதி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது கடத்தலில் ஈடுபட்ட தம்பதியினருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 400 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon