தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை இராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று (அக்டோபர் 05) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், நேற்று (அக்டோபர் 04) சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சளித்தொல்லையின் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அக்டோபர் 02 ஆம் தேதி வயிற்றுப் போக்கு காரணமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, எஸ்.பி.வேலுமணி, துரைமுருகன் ஆகியோரை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.