மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

ஜெ. வாரிசு நான்தான்!

ஜெ. வாரிசு நான்தான்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று சான்றளிக்கக் கோரி கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அவரை உரிமையியல் நீதிமன்றத்தை அணுக தாசில்தார் அறிவுறுத்தியுள்ளார்.

உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். மருத்துவமனையில் ஜெயலலிதாவை கவனித்து வந்த சசிகலாவுடன், தீபக்கும் உடனிருந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மர்ம மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக், தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று சான்றளிக்க வேண்டும் என்று கிண்டி தாசில்தாரிடம் மனு அளித்துள்ளார். ஆனால் மனுவை பரிசீலித்த தாசில்தார்," இறந்தவர்களின் நேரடி வாரிசுக்குத்தான் தாசில்தார் வாரிசு சான்றிதழ் தர முடியும். 2-ம் நிலை வாரிசுக்கு சான்றிதழ் தர முடியாது என்பதால், உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி மரபுரிமை சான்று பெற்றுக் கொள்ளுமாறு பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கினால் அதற்கு தங்களின் அனுமதியையும் பெற வேண்டும் என்று தீபா, தீபக் இருவரும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon