மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

தினம் ஒரு சிந்தனை: கலை!

தினம் ஒரு சிந்தனை: கலை!

கலை கைவிடப் படுகிறதே தவிர, அது ஒருபோதும் முடிக்கப் படுவதில்லை.

-லியொனார்டோ டா வின்சி (15 ஏப்ரல் 1452 - 2 மே 1519). புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டடக்கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், சிற்பி,ஓவியர் மற்றும் பல்துறை மேதை. உலகப் புகழ்பெற்ற தனது ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தை 1495-ல் வரையத் தொடங்கி, 1498-ல் நிறைவு செய்தார். 1503-ல் புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார்.ஓவியம் உள்ளிட்ட 9 வகையான கலைகளைக் குறித்தும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.இவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாகத்தான் படிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.மோனலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் உள்ளிட்ட மகத்தான படைப்புகள், காலத்தை வென்றது.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon