மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

கமல் ரகசியப் பரிசில் என்ன இருந்தது?

கமல் ரகசியப் பரிசில் என்ன இருந்தது?

கமல் தன்னால் செய்ய முடியாததை எப்போதும் சொல்லமாட்டார் என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாள் விழாவில் மீண்டுமொருமுறை நிரூபித்தார்.

50 லட்சம் பரிசுக்காக பிக்பாஸ் போட்டிக்குள் நுழைந்தவர்களில் ஒருவரைத் தவிர யாருக்கும் அந்தப் பரிசு கிடையாது. ஆனால், இரண்டு மற்றும் மூன்றாம் இடம்பிடித்த கணேஷ் வெங்கட்ராம் மற்றும் சினேகன் ஆகியோருக்கு விவோ சார்பில் மொபைல் பரிசளிக்கப்பட்டது.

இதைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் தங்களுக்கும் ஏதாவது ஒரு பரிசுவேண்டும் என்று கேட்டபோது, அவங்க ஏதாவது பரிசு வெச்சிருப்பாங்கன்னு நம்புறேன். அப்படி ஒருவேளை அவங்க தரலைன்னா நான் தர்றேன் என்று ஒரு பதில் சொல்லிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தார் கமல். ஏதாவது திட்டமிட்டு கிஃப்டு கமல் கையிலிருந்து கிடைக்கும் என்று நினைத்த அவர்களை, அவ்விழா முடியும்போதே தனித்தனியாக பெயர் எழுதப்பட்ட பரிசுகளை வழங்கி ஆச்சர்யப்படுத்தினார். பரிசுப் பொருளாக பேக்கிங் செய்யப்பட்ட அந்த பண்டலில் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் புத்தகம் மற்றும் கமல்ஹாசன் எழுதிய ஹேராம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஆகியவையும் Rivers சிடியும் இருந்திருக்கின்றன.

இந்தத் தகவலை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஜல் பசுபதி ஃபோட்டோ எடுத்து டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon