மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

தினகரன் என்ன ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரா?

தினகரன் என்ன ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரா?

தினகரன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய அவர் என்ன ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரா என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முதல்வருக்கு எதிராகவும் தினகரன் அணியைச் சேர்ந்தவர்கள் துண்டு நோட்டீஸ் விநியோகித்தைத் தொடர்ந்து, தினகரன் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த புதிய பார்வை ஆசிரியர் நடராஜனின் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த பிறகு நேற்று( அக்டோபர் 4) சென்னை பெரும்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா சகோதரர் திவாகரன்," தேசத்துரோக வழக்கை பதிவு செய்ய தினகரன் என்ன ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துள்ளாரா?. இதுகுறித்து டிஜிபியிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.

மேலும் விரைவில் சசிகலாவை பரோலில் அழைத்து வரவுள்ளோம். அதற்காக ரிட் மனுவும் தாக்கல் செய்யவுள்ளோம். நடராஜனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon