மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

வாழவைக்கும் வாழைத்தண்டு புலாவ் : கிச்சன் கீர்த்தனா – 05

வாழவைக்கும் வாழைத்தண்டு புலாவ் : கிச்சன் கீர்த்தனா – 05

வாழைத்தண்டு பொரியல், சாம்பார் செய்து வாரம் இருமுறைகள் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றாது. அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது.

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம். இதெல்லாம் நமக்குத் தெரிந்ததே. வழக்கமான வாழைத்தண்டு பொறியலோ, சாறோ கொடுத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முகம்சுளிக்கவே செய்வதால், இன்று வாழைத்தண்டில் புலாவ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – ஒரு கப்

வாழைத்தண்டு – பெரிய துண்டு

மோர் – ஒரு கப் + சிறிதளவு (வாழைத்தண்டை ஊற வைக்க)

தண்ணீர் – ஒரு கப்

சீரகத்தூள் – கால் டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – ஒன்று

பிரிஞ்சி இலை – ஒன்று

பட்டை – ஒரு சிறிய துண்டு

கிராம்பு, ஏலக்காய் – தலா 2

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

இஞ்சி-பூண்டு விழுது – கால் டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புதினா – சிறிதளவு

செய்முறை

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாஸ்மதி அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி மோரில் ஊறவைத்து, மோரை வடித்துவிட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

* அடுப்பில் குக்கரை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும்.

* அடுத்து அதில் வேகவைத்த வாழைத்தண்டு, உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* ஒரு கப் மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (மோரும் வாழைத்தண்டும் சேர்ந்து அரிசியில் இரண்டு மடங்காக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்).

* கொதி வந்தவுடன் ஊறிய பாஸ்மதி அரிசியை கொதிக்கும் கலவையில் சேர்த்து, அரிசி உடையாமல் கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடிப்போட்டு ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

* பிறகு அடுப்பை அணைத்து, உடனே இறக்கி, பிரஷர் நீங்கியதும் சூடாக தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

* வாழைத்தண்டு புலாவ் ரெடி.

கீர்த்தனா டிப்ஸ்

1.டைம் இல்லைன்னு சொல்லி உப்புமாவ சமைச்சு போடறத நிறுத்துங்க...

2.கல்யாணம் ஆயிட்டாலே பொண்ணுங்கள ஆன்டினு கூப்பிடுறத நிறுத்துங்க...

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

கிச்சன் கீர்த்தனா 03

கிச்சன் கீர்த்தனா 04

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon