மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

ரோபோ மூலம் பார்லி அறுவடை!

ரோபோ மூலம் பார்லி அறுவடை!

அனைத்துத் துறைகளிலும் ரோபோவின் ஆளுகை வந்துவிட்டது. மனிதன் செய்து வந்த அனைத்து வேலைகளையும் தற்போது ரோபோ செய்து வருகின்றது.ரோபோ, அலுவலக வேலைகள் முதல் விவசாயம் வரை செய்கிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் ரோபோக்கள் மூலம் பார்லியை விதைத்து, அறுவடை செய்து இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த ரோபோ தனியாக பார்லி விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் போன்ற வேலைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. பல விவசாயிகள் ஏற்கனவே அறுவடைக்குப் பயன்படும் செயற்கைக்கோள் வழிகாட்டி கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அதற்காக தனியாக ஒரு ரோபோவை உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். இயந்திரங்கள் சுயமாக இயங்கினாலும், பல முக்கியமான முடிவுகள் மனிதர்களின் கைகளில் உள்ளது. முக்கியமான முடிவுகளை எடுக்கவும், ரோபோக்களின் திட்டங்களை அதற்கேற்ப மாற்றியமைக்கவும் தினமும் விஞ்ஞானிகள் அது தொடர்பானவர்களிடம் கலந்து ஆலோசிப்பார்கள்.

இத்தகைய ரோபோக்கள் மூலம் அதிக அளவில் உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இதன்மூலம் உணவு பஞ்சம் இல்லாத உலகை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon