அரசினை விமர்சித்துக் கருத்து தெரிவிப்பதால் என் மீது தேசத்துரோக வழக்குத் தொடுத்தால்
அதைச் சந்திக்கத் தயார் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக குன்னூரில் தங்கியுள்ள ஸ்டாலின், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்தார். அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன்பின், இன்று (அக்டோபர் 03) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போது மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவிவருகிறது. அதற்காக பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் மீதே ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது இவ்வாறு அரசே தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் டெங்குவிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும்?
நான் இவ்வாறு அமைச்சர் பற்றியும் அரசு பற்றியும் கருத்துக் கூறுவதால் என் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தாலும், நான் அதனைச் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார் ஸ்டாலின்.
உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.