மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

கன்னி பட்ஜெட்… கல்வி பட்ஜெட்!

 கன்னி பட்ஜெட்… கல்வி பட்ஜெட்!

மனித நேயர் என்னும் மாண்புமிக்க கல்வியாளர் சென்னை மாநகராட்சியின் மேயர் என்ற பொறுப்புக்கு வந்தது முதல் அவர் கல்வியில் காட்டிய அக்கறையை முதல் புரட்சியாக பார்த்து வருகிறோம். மேயர் எடுத்த முன் முயற்சிகளின் காரணமாக மாநகராட்சிப் பள்ளிகளுக்கு இருந்த அவப் பெயர் நீங்கி, பல அவார்டுகளை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றன மாநகராட்சிப் பள்ளிகள்.

வள வகுப்பறைகள் என்கிற ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்திய மேயர் அதை கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய ஆவண செய்தார்.

அவர் மாநகராட்சிப் பள்ளிகளின் மீது காட்டிய அக்கறையை 2012- 13 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டின் மூலமாகவே நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அந்த பட்ஜெட் உரையை மேயர் சைதை துரைசாமி வாசித்தார்.

பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளை கொஞ்சம் மீட்டலாமா?

பள்ளிதோறும் வளர்ச்சித் திட்டம்:

சென்னை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரையிலான அனைத்து பள்ளிகளிலும் ‘பள்ளிதோறும் வளர்ச்சித் திட்டம்’ ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒருங்கிணைந்த கவனிப்பு மேற்கொள்ளப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் வருங்காலத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஐஏஎஸ் தேர்வு, ஐஐடி மற்றும் அகில இந்திய பொறியியல், மருத்துவம், டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் அகில இந்திய, மாநில அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளை எழுதும் வகையில் அதற்கான அடிப்படைப் பாடப்பிரிவு மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்படும்.

நுழைவுத் தேர்வுகளுக்கு ஆயத்தம்!

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள், அணுகுமுறைகள் ஆகியவற்றை நன்கு அறிந்திட அவர்களுக்கு ‘சிறப்பு அடிப்படை பாடப்பிரிவுகள்‘ தொடங்கப்படும். நூலகம் இல்லாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் புதிய நூலகம் அமைக்கப்படும். மாநகராட்சி பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் படிக்க ஊக்குவிக்கப்படும். அந்த இதழ்களில் இருந்து மாதாந்திர ‘வினாடி, வினா’ போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா

மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ‘இசைப்பயிற்சி அறை’ தலா ஒன்று உருவாக்கப்பட்டு, இந்திய மற்றும் மேற்கத்திய இசை கருவிகள் வாசிக்க பயிற்சி அளிக்கப்படும். இதற்காக பகுதி நேர இசைப்பயிற்சி ஆசிரியர் நியமிக்கப்படுவர். மாநகராட்சி பள்ளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக 32 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

வீடியோ வழி கல்வி

அதேபோன்று 32 மேல்நிலை, 38 உயர்நிலைப் பள்ளிகளில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள். நடப்பாண்டில் 30 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும். மேல்நிலை வகுப்பில் படிக்கும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு வீடியோ, ஆடியோ மூலம் கற்பிக்கும் முறை ஏற்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு சுகாதார அட்டை!

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு குடும்பங்களில் இருந்தே கல்வி கற்க வருகிறார்கள். அவர்களின் பொருளாதார நிலையும் பின் தங்கியதாகவே இருக்கிறது. இந்த சூழலில் இருந்து கல்வி கற்க வருகை தரும் அம்மாணவர்களுக்கு சுகாதாரம் அவசியமான ஒன்று. அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் கல்வியில் சிறப்பான கவனத்தை செலுத்தமுடியும். மாணவர்களின் சுகாதாரம் மீது போதிய கவனம் செலுத்த அவரது குடும்பத்தினருக்கு போதிய அளவு பொருளாதாரமோ, அதுபற்றிய அறிதலோ இல்லாத நிலைதான் பெரும்பாலும் நிலவுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு ‘புதிய சுகாதார அட்டை’ அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி இதயம், கண் போன்ற பரிசோதனை செய்யப்பட்டு பதிவு செய்யப்படும்.

மாநகராட்சியில் தான் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டிலே அதாவது கன்னி பட்ஜெட்டிலேயே கல்விக்கும், மாநகாராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்.இப்படிப்பட்ட ஒரு மேயரைத்தானே மாநகராட்சிப் பள்ளிகள் எதிர்பார்த்திருந்தன.

மாநகராட்சிப் பள்ளிகளின் சித்திரத்தையே மாற்றி எழுதியவர் மனித நேயர். அங்கே இருந்தும் சாதனை மாணவர்களை வெளிக் கொண்டுவர முடியும் என்ற வெளிச்ச வாக்கியங்களை எழுதிக் காட்டியவர்.

கன்னி பட்ஜெட்டையே கல்வி பட்ஜெட் ஆக மலரச் செய்த மனித நேயர், சென்னை மாநகராட்சியில் செய்த கல்வி சீர்திருத்தங்களை இன்னும் பார்ப்போம்.

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon