மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

நீட்: துண்டுப் பிரசுரத்தை எரித்த கனிமொழி

நீட்:  துண்டுப் பிரசுரத்தை எரித்த கனிமொழி

சென்னை உயர் நீதிமன்றம் அருகே, இன்று (செப்டம்பர் 13), முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீட் எதிர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது. மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தித் தொடங்கிய இந்த ஆர்பாட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அங்கே சிலர் நீட் தேர்வுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. இதுபற்றி விசாரித்து அறிந்த கனிமொழி, அந்தத் துண்டுப் பிரசுரத்தை வாங்கினார்.

நாம் நீட் டுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம், ஆனால் இங்கேயே நீட் ஆதரவுத் துண்டுப் பிரசுரமா என்று கேள்வி கேட்டார். அங்கே, அனிதாவின் புகைப்படத்தின் முன் ஏற்றி வைக்கப்பட்டிருந்த அஞ்சலி மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. சட்டென அந்த மெழுகுவர்த்தியை எடுத்து, அந்த நீட் ஆதரவுத் துண்டுப் பிரசுரத்தை அங்கேயே கொளுத்தினார் கனிமொழி.

அனிதாவிடம் இருந்து எடுத்த போராட்டத் தீயால், நீட்டை எரிப்போம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது என்று அங்கிருந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon