மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

திருச்சி பொதுக்கூட்டம் நடக்குமா?

திருச்சி பொதுக்கூட்டம் நடக்குமா?

திருச்சியில் அதிமுக அம்மா அணி சார்பில் அறிவிக்கப்பட்ட நீட் எதிர்ப்புப் பொதுக்கூட்டத்துக்கு மாநகராட்சி அனுமதி அளிக்காமல் இழுத்தடித்துவருவதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் மனோகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நீட் தேர்வை எதிர்த்து திருச்சியில் செப்டம்பர் 16ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால், நீட் தேர்வை எதிர்த்து அமைதியான போராட்டங்கள் மட்டுமே நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தினகரன் அறிவித்த திருச்சி பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகர காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, தினகரன் ஆதரவாளரும் முன்னாள் சட்டமன்ற அதிமுக கொறடாவுமான மனோகரன் இன்று (செப்டம்பர் 13) திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்‍கு கோரி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ள மாபெரும் பொதுக்‍கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. எனினும், உரிய அனுமதி பெற்று பொதுக்‍கூட்டம் நிச்சயம் நடக்‍கும்” என தெரிவித்தார்.

இதனால், தினகரன் அறிவித்த நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெறுமா என்ற ஐயம் அதிமுக அம்மா அணியில் தொடர்கிறது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon