மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஷங்கர் அஜித் கூட்டணி சாத்தியமா?

ஷங்கர் அஜித் கூட்டணி சாத்தியமா?

'விவேகம்' படத்தைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பது கோலிவுட்டில் அதிகமாக வலம் வரும் கேள்வி. விஷ்ணு வர்தன், சிவா என பலரும் கூறி வரும் நிலையில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'விவேகம்' திரைப்படம் விமர்சன ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை. அப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் நிறைய ரிஸ்க் எடுத்து நடித்ததன் காரணமாக தோளில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது அறுவைச் சிகிச்சையை முடித்து வீடு திரும்பியுள்ளார். இன்னும் 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளததால், 6 மாதங்களுக்கு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ஷங்கர் முதல்வன் 2 எடுக்கவுள்ளார் என்றும், அதற்காக அஜித்தை சந்தித்து கதை கூறியுள்ளார் என்றும், ஏ.எம்.ரத்னம் அப்படத்தை தயாரிக்கவுள்ளார் எனவும் செய்திகள் கிளம்பியது. ஆனால் ஷங்கர் 2.0 படத்திற்கான இறுதி கட்ட வேலையில் பிஸியாகி இருப்பதால் அஜித்தை சந்த்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அஜித்தின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்கவிருப்பதாகவும், இதற்கான கதை விவாதம் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிகிறது. ஆகவே, அஜித்தின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது அவருடைய ஓய்வு முடிந்தபின்பே தெரியும்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon