மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சின்னம்மா ஜிமிக்கி கம்மல், பன்னீரு சுட்டுட்டுப்போயி..: அப்டேட் குமாரு

சின்னம்மா ஜிமிக்கி கம்மல், பன்னீரு சுட்டுட்டுப்போயி..: அப்டேட் குமாரு

கைதாகாத எம்.எல்.ஏவை கைதுன்னு நியூஸ் போடுறீங்களே உங்க சகோதரர்கள் பற்றியும் இப்படி தான் நியூஸ் போடுவீங்களா, கிராஸ் செக் பண்ணி போடுங்கப்பான்னு தினகரன் மீடியாக்களுக்கு ஒரு பல்ப் கொடுத்துட்டார். என்னப்பா மீடியாவை அட்டாக் பண்ணிட்டாரேன்னு கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு. ஜெயலலிதா எதிர்த்த நீட், உணவு பாதுகாப்பு மசோதா எல்லாத்தையும் ஆதரிக்குற எடப்பாடி ஆட்சி, அம்மா ஆட்சி இல்லை, சும்மா ஆட்சின்னு தனக்கேயுரிய பாணியில் அடிச்சு நொறுக்கிட்டு இருக்கார் டி.ஆர். சேனல்கள் எல்லாம் அதை விட்டுட்டு சிம்பு நயன்தாரா படத்துல வர்ற பாட்டை அவர் பாடுறத மட்டும் மறுபடி மறுபடி காட்டிகிட்டு இருக்காங்க. ரைட்டு இவங்களை சொல்றது தப்பே இல்லைன்னு நினைச்சுகிட்டேன். நேத்து பெங்களூர் போன போலீஸ்லாம் எங்கப்பான்னு கேட்டேன். ஆளுநர் எப்ப மும்பையில இருந்து வர்றது நாம எப்ப பிள்ளைகுட்டிகளை பார்க்குறதுன்னு ‘குடகுமலை காற்றில் ஒரு பாட்டு கேக்குதா...’ பாடலை ரிப்பீட் மோடுல போட்டு குடகுலயே குத்த வச்சு உக்கார்ந்துட்டாங்களாம். நீங்க அப்டேட்ட பாருங்க.

Kozhiyaar

'இது உண்மையாக இருந்துவிடக் கூடாது' என்றும், 'இது பொய்யாக இருக்க கூடாது' என்ற தருணத்தையும் அனைவரும் கண்டிப்பாக கடந்திருப்போம்!!

azam_twitz

இருப்பிடத்தை சுத்தமாக வைக்காத காரணத்தால்,தன்னைத் தானே அடித்துக் கொள்ளும் தண்டனையை கொசுவின் மூலம் இறைவன் வழங்குகிறான்!!!

nithratweets

நாதியற்றுப் போனாலும்

ஜாதியை விடுவதில்லை

சிலர்

udanpirappe

எடப்பாடி : அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் அமித்ஷா ச்சி..

அம்மா அவர்களே ..!!

kunnathurarumug

இரட்டை இலையை மீட்க ஈ.பி.எஸ்.,ஓ.பி.எஸ் அணி டெல்லி பயணம்.

கச்சதீவு மீட்கவும், காவிரி பிரச்சனை தீர்க்கவும் எத்தனை முறை டில்லி சென்றார்கள்.

Mathavan Sankar

தமிழ்நாட்டில் அரசுமருத்துவ கல்லூரி:24

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படித்த

மாணவர்களுக்கு படிக்க கிடைத்த மருத்துவ சீட்டு:5

என்னங்க சார் உங்க சட்டம்,,

Kannan_Twitz

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம்.

-சந்திரசேகர ராவ்

இதையே தமிழ்நாட்ல சொன்னா அவன் இனப்பிரிவினவாதி, ஆன்டி இந்தியன், நக்சலைட்

pandi_tamilan

உப்புமாக்கள் பெண்களின் உணவு கண்டுபிடிப்புகளில் ஆண்களை பலிவாங்க கண்டுபிடித்திருக்கலாம்

CreativeTwitz

வாழ்க்கய இப்பதான் புரிஞ்சிக்கிட்டன் இனிமே நாம எடுத்து வெக்கிற ஒவ்வொரு அடியும் மிக ஜாக்கிரதயா வெக்கனும்

ரொம்ப மழ பேயுது.வழுக்கி விட்டுடும்

karuthu_ganesan

வடிவேலு தினமும் இங்கே நம்மை சிரிக்க வச்சுகிட்டு தான் இருக்கார் கமண்ட் போட்டோ மூலமாக

kumarfaculty

நமது மொபைலில் பேட்டரி தீர்ந்து விட பக்கத்தில் இருப்பவர் வீடியோவோ, பாட்டோ கேட்டுக் கொண்டிருக்கும் போது லைட்டா பொறாமை வரத்தான் செய்கிறது...!!!

ShivaP_Offl

ஒரு வாரத்துக்குள் விவாகரத்து வாங்கலாம்-செய்தி

ஆதார்கார்டு, பேன்கார்டு, ரேசன்கார்டையும் ஒரே வாரத்துக்குள் வழங்க உத்தரவு போடுங்க யுவர்ஹானர்

chithradevi

அனிதாவையும் ஆசிரியர் போராட்டத்தையும் மறக்கடிக்க ஒரு ஜிமிக்கி கம்மலே தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இருக்கிறது

link2selva

பிரிக்கறது ஈஸி. சேர்க்கிறது கஷ்டம். - ஜட்ஜ் ஐயா மைண்ட் வாய்ஸ்

vishnut87

இந்த டீ காப்பிய மட்டும் கண்டு புடிக்கலண்ணா...

காலங்காத்தாலயே டீக்கடைக்கு பதில் சாராயகடைய திறந்து வச்சிருப்பானுங்களோ

pandi_tamilan

காதலிக்க எவரும் நல்லநேரம் கெட்டநேரம் பார்ப்பதில்லை

ஆனால் திருமணம் செய்யதான் ........

vinothanaseeli

குடும்ப அரசியல் ஆபத்தானது

-எச்.ராஜா

பாஸ், இருக்குற குழந்தை எல்லாம் ஆக்சிஜன் இல்லாம கொண்டுட்டா குடும்பமே இருக்காதே

அப்பறம் எப்படி குடும்ப அரசியல்

MohammedMastha

தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது-செய்தி

விசால் படத்தை தியேட்டர்ல பாக்குற ஒரே மனுசன் அவன்தான் அவனையும் புடிச்சிட்டா யாரு தியேட்டருக்கு போவா?

Srilaksman

'தோல்வியே வெற்றியின் முதற்படி"

நமக்கு எல்லாபடியுமே முதற்படியாதானே இருக்கு

withkaran

சசிகலா நியமனம் செல்லாது.

சசிக்கலாவால் நீக்கப்பட்ட எந்த ஆணையும் செல்லாது- ஆனா சசிகலா எடப்பாடிய முதல்வரா நியமிச்சது மட்டும் செல்லும்

azam_twitz

ஜெயலலிதாவிற்கு 15கோடி செலவில் மணிமண்டபம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

அனிதாவிற்கு நிதியுதவி ஒதுக்குபோதுகூட 7 லட்சம்தான்

எதிர்கட்சியே பரவாயில்ல

Meenamma Kayal

சமாதானம் அடைவதற்கு காரணங்கள் தேடி நான்தான் குழம்பிக்கொள்கிறேன்.

''நீ என்னை அடிச்சுட்டல்ல, சாரி கேளு. அப்பத்தான் பேசுவேன்'' என்று எளிதில் தெரிவித்துவிடுகிறாள் மகள்.

Maga_raja

அடுத்தவங்க சாப்பிட்ட ஸ்பூன்ல சாப்பிடுவாங்களாம், ஆனா,

ஒருத்தர் தண்ணீர் குடிச்ச கிளாஸ்ல இன்னொருத்தர் குடிக்க மாட்டாங்களாம்,

#முரணான_உலகம்!!!

கருப்பு கருணா

முதலில் கழிப்பறை கட்டுவோம். பிறகு கோயில் கட்டலாம் : மோடி

க்கும்..இதை மொதல்ல அந்த பாபர் மசூதிய இடிச்ச கும்பல்கிட்ட சொல்லு வாத்யாரே..!

abuthahir

பல இளைஞர்களின் உச்சகட்ட போராட்டம்

பின் பாக்கெட்டில் உள்ள சீப்பை எடுக்க நடக்கிறது

சிவசங்கரன் சுந்தரராசன்

ரஞ்சித் சினிமாக்காரர் அவர் பேச்சுக்களை பெரிது படுத்த வேண்டாம்-சீமான்.

ஆமா அவுரு சினிமா காரரு, சாரு சேகுவேரா கூட புல்லட்டுல டபுள்ஸ் போனவரு...!

Endhirapulavan

பொண்ண அடிச்சா பொண்ணபோயி அடிக்கிறியேங்கிறதும்

பொண்ணுகிட்ட அடிவாங்குனா பொண்ணுகிட்டபோய் அடிவாங்குற அசிங்கமா இல்லையான்றதும்

என்னமாதிரி டிசைனோ?

Kozhiyaar

எல்லோரும் வெற்றிக்காக போராட ஆரம்பிக்கிறோம்!!

ஆனால் பாதியிலேயே என்ன போட்டி என்பதை மறந்து விடுகிறோம்!!

HAJAMYDEENNKS

கூடிய விரைவில் புளுவேல் கேம் மீட்பு மையம் ஆரம்பித்தாலும் ஆச்சர்யமில்லை தமிழகத்தில் ...!

DhasthanSatham

படிக்குறவனக்கு நீட்

படிச்சு முடிச்சவனுக்கு வேலை இல்ல

அரசு ஊழியர்க்கு பென்சன் இல்ல

பிஸ்னஸ் பண்றவனுக்கு GST

இது தமிழ்நாடா இல்ல சுடுகாடா

Anbe Selva

ரஞ்சித் சொல்ற தமிழ்தேசியத்துக்கும் அண்ணனுக்கும் என சம்பந்தம், ஏன் கொந்தளிக்கிறாரு?..

அண்ணன் வகைப்பட்ட தமிழ்த்தேசியம் ஆல்ரெடி அடைந்த ஒண்ணுதானே, அதை அமைத்துகாட்டிய தோழர்கள் ஓபிஎஸ், இபிஎஸ்-சே கம்முன்னுதானே இருக்காங்க, அண்ணன யாரோ கன்பியூஸ் பண்ணிருக்கா?.

நக்கல் மன்னன் 2.0

"சின்னம்மா ஜிமிக்கி கம்மல்"

"பன்னீரு சுட்டுட்டுப்போயி,"

"பழனிசாமி அடகு வச்சு"

"மோடி ஆட்டைய போட்டு"..?

-லாக் ஆஃப்

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon