மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

லிப்லாக் காட்சியில் பியா

லிப்லாக் காட்சியில் பியா

பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். பின்னர் ஏகன், கோவா, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்குப் பெரிதாகப் படங்கள் ஹிட்டாகவில்லை. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு `அபியும் அனுவும்' படத்தில் நடித்துவருகிறார். போஸ்டர், டீசர் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற நிலையில் லிரிக் வீடியோவின் டீசர் வெளிவந்துள்ளது.

ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமைக்குரிய பி.ஆர். விஜயலட்சுமி இதனை இயக்கியுள்ளார். தரண்குமார் இசையில் வெளிவந்துள்ள `சரிகம பதநிச' பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். உண்மையான காதலை மையமாகக் கொண்டு உருவாகிவரும் படம் இது. தற்போது வெளிவந்துள்ள பாடலின் விஷுவல் காட்சியில் டோவினோ தாமஸூம் பியாவும் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளனர்.

சரிகம நிறுவனத்தின் திரைப்பட பிரிவான யூட்லி தயாரித்துவரும், இப்படத்தில் ரோகினி, சுஹாசினி, பிரபு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். தமிழும் மலையாளத்திலும் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 22ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.

சரிகம பதநிச பாடல் டீசர்

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon