மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பெயர் மாறிய வருவாய்த் துறை!

பெயர் மாறிய வருவாய்த் துறை!

தமிழக அரசின் வருவாய்த் துறையின் பெயர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துத் துறைகளுக்கும் முன்னோடி துறையாக இருப்பது வருவாய்த் துறை. இந்த துறையின் கீழ்தான் வருவாய் நிர்வாகம், நில நிர்வாகம், நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து நிலங்களும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டுக்குள்ளே வருகின்றன. நிலம் தொடர்பான ஆவணங்களைப் பராமரிப்பதும் வருவாய்த் துறைதான். இயற்கைப் பேரிடர்களின்போது மறுசீரமைப்பு செய்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது, பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவையும் வருவாய்த் துறையின் அதிகாரத்திற்குள்ளே வருகின்றன.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசு இன்று (செப்டம்பர் 13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் வருவாய்த் துறை, இனி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon