மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

எரிபொருள் தேவை சரிவு!

எரிபொருள் தேவை சரிவு!

இந்தியாவின் எரிபொருள் தேவை ஆகஸ்ட் மாதத்தில் 6.1 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

செப்டம்பர் 12ஆம் தேதியன்று, எண்ணெய்த் துறை அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் ஆய்வு பிரிவின் அறிக்கை வெளியாகியது. அதில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் எரிபொருள் தேவையை விட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் எரிபொருள் தேவை 6.1 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத்தின் மொத்த எரிபொருள் பயன்பாடு 15.74 மில்லியன் டன்னாக இருந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டை வைத்து எரிபொருளின் தேவையும் மதிப்பிடப்படுகிறது.

பெட்ரோல் விற்பனை மட்டும் கடந்த ஆண்டை விட 0.8 சதவிகிதம் சரிவடைந்து 2.19 மில்லியன் டன்னாக இருந்துள்ளது.சமையல் எரிவாயுவின் விற்பனை 11.8 சதவிகிதம் அதிகரித்து 2.06 மில்லியன் டன்களாக இருந்துள்ளது. நாப்தாவின் விற்பனை 7.6 சதவிகிதம் சரிவடைந்து 1.06 மில்லியன் டன்களாக இருந்துள்ளது. சாலை அமைக்கப் பயன்படும் பிடுமென்னின் விற்பனை 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எரிபொருள் எண்ணெய்யின் பயன்பாடு 6.9 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதையும் கட்டுப்படுத்தவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon