மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு!

விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு!

உத்தரப் பிரதேச மாநில அரசு அம்மாநில விவசாயிகள் சுமார் 11.93 லட்சம் பேருக்கான விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதற்காக ரூ.7,371 கோடி செலவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் உத்தரப் பிரதேச மாநில அரசு ரூ.1 லட்சம் வரையில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த இயலாத கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அதன்படி 2016 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.10,000 அல்லது அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள் 11,27,890 பேரின் கடனைத் தள்ளுபடி செய்வதாக உறுதியளித்தது. இதற்காக ரூ.32,000 கோடி அளவிலான கடன் தள்ளுபடித் திட்டம் ஒன்றையும் அம்மாநில அரசு அறிவித்தது.

இதுவரையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையில் கடன் பெற்ற 41,690 விவசாயிகளுக்கும், ரூ.500 முதல் ரூ.1000 வரையில் கடன் பெற்ற 5,5553 விவசாயிகளுக்கும், ரூ.1 முதல் ரூ.100 வரையில் கடன் பெற்ற 4,814 விவசாயிகளுக்கும் கடன் பிரச்னையிலிருந்து விமோசனம் அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon