மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சிறுவர்கள் பார்க்க முடியாது!

சிறுவர்கள் பார்க்க முடியாது!

நடிகை ராய் லக்ஷ்மி கதாநாயகியாக பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படம் 'ஜூலி 2'. 2004-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'ஜூலி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய தீபக் ஷிவ்தாசனி தற்போது இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

விஜூ ஷா, ரூ பேண்ட், அடிஃப் அலி, ஜாவேத் – மோஷின் ஆகியோர் இசையமைத்துள்ள இதற்கு சமீர் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கீதா டிரேடிங் கம்பெனி’ மற்றும் ‘ட்ரயம்ப் டாக்கீஸ் எல்.எல்.பி’ நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், டீஸர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் எதிர்மறையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'ஜூலி 2 படத்துக்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இப்படத்தின் விநியோகஸ்தர் மற்றும் விளம்பரதாரருமான பஹ்லஜ் நிஹலனி (முன்னாள் சென்சார் போர்டு தலைவர்) என்.டி.டி.வி செய்திகளுக்கு அளித்துள்ள பேட்டியில், " ஜூலி 2 படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கும் என்பது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். தற்போதும் நான் தணிக்கைக் குழுவில் இடம்பெற்றிந்தால் இந்த படத்தின் எந்தக் காட்சிகளையும் நீக்காமல் ‘ஏ’ சான்றிதழ் வழங்கி இருப்பேன்" என்று கூறியுள்ளார். மேலும் இது ஒரு வயது வந்தோர் பார்க்கும் படமாக இருந்தாலும் எந்த விதமான நிர்வாண காட்சிகளோ, இரட்டை அர்த்தமுள்ள வசனங்களோ இல்லாத படம். பெரியவர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய குடும்ப படம் என்று தெரிவித்துள்ளார்.

ஜூலி 2 படத்தை ஹிந்தியில் நேரடியாகவும் தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்தும் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.பஹ்லஜ் நிஹலனி சி.பி.எஃப்.சி தலைவராக இருந்தபோது பல படங்களில் வரும் நெருக்கமான காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளை நீக்க வலியுறுத்தியவர் தற்போது அவர் விநியோகம் செய்யும் ஜூலி 2 படத்தின் கட்சிகள் எதையும் நீக்கவேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்து பேசுவது சரியா? எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon