மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

புதிய நிறுவனம் தொடங்கும் வாட்ஸ் அப் நிறுவனர்!

புதிய நிறுவனம் தொடங்கும் வாட்ஸ் அப் நிறுவனர்!

வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் அதிலிருந்து விலகி, புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் மெசஞ்சர் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது. இதை யாஹூ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான பிரையன் ஆக்டன், ஜேன் கோம் ஆகிய இருவரும் நிறுவினர். தனித்து இயங்கிவந்த வாட்ஸ் அப்பை 2014ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலர் கொடுத்துக் கைப்பற்றியது. தகவல் பரிமாற்றம், வீடியோ கால் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வாட்ஸ் அப் பிரபலமான செய்தித் தொடர்புச் செயலியாகச் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆக்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “எட்டு வருடங்களாக வாட்ஸ் அப்பில் பணியாற்றிய பிறகு அதிலிருந்து விலகிப் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறேன். தகவல் மற்றும் தொழில்நுட்பச் சேவை சார்ந்த நிறுவனமாக அது இருக்கும். நான் இந்த வயதிலும் துணிச்சலான முடிவெடுக்கும் வகையில் இருப்பதில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon