மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

குரூப் -1 ஏ போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

குரூப் -1 ஏ போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

வனத்துறை பணிகளுக்கான குரூப்-1 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நேற்று (செப்டம்பர், 12 ) அறிவித்துள்ளது .

குரூப் -1 ஏ பணிக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே ஒன் டைம் பதிவு செய்தவர்கள் அக்டோபர் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . அதற்கான தேர்வு டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வனத்துறை என்பதால் அறிவியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . எனவே, விவசாயம், தாவரவியல், வேதியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், வனவியல், நிலவியல், தோட்டக்கலை, கணிதம், புள்ளியியல், கால்நடை அறிவியல், உயிரியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

குரூப்-1 ஏ தேர்வில் முதன்மை, முக்கிய தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன.

குரூப்-1 ஏ முதன்மை தேர்வுக்கு தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது , தேர்வு மையங்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் எதாவது ஒரு இடத்தில் மட்டுமே தேர்வெழுத முடியும்.

குரூப்-1 ஏ முக்கியத் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே வனத்துறை பணிக்கு விண்ணப்பிக்க முடியும். எஸ்சி/ எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவோ, வங்கி மூலமாகவோ செலுத்தலாம். வங்கி மூலம் கட்டணம் செலுத்த அக்டோபர் 11 ஆம் தேதி கடைசி நாளாகும்.

மொத்தம் 14 பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் போட்டி கடினமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்னும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon