மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

வந்துவிட்டது `ஆப்பிள்வாட்ச்-3'!

வந்துவிட்டது `ஆப்பிள்வாட்ச்-3'!

ஆப்பிள் நிறுவனம் தொடங்கிய காலத்தில் இருந்தே மிகப் பாதுகாப்பான மொபைல்களை வெளியிட்டு, மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது. ஐ-போன்களைப் பொறுத்த வரை பல்வேறு மாடல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாடல் என்ன என்ற கேள்வி அதன் பயனர்கள் மத்தியில் பெருமளவில் இருந்த வண்ணம் இருக்கிறது. அந்தவகையில் தற்போது ஆப்பிள் நிறுவனம், `ஆப்பிள் வாட்ச்-3'யை அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய ஆப்பிள் வாட்ச் 3, பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, குறுந்தகவல்கள் மற்றும் சிரி (sri)வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ஆப்பிள் ஏர்பட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது. அளவைப் பொருத்த வரை ஆப்பிள் வாட்ச் 2 போன்றே காட்சியளிக்கும். ஆப்பிள் வாட்ச் 3 முதல் முறையாக சிரி பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் W2 சிப்செட் கொண்டுள்ள ஆப்பிள் வாட்ச் ஒஎஸ் 4 ஆப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் கிடைக்கும்.

பல்வேறு நிறங்களில் கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் 3 செப்டம்பர் 15 ஆம் தேதி முன்பதிவு துவங்கி, வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இது 21,000/- முதல் 25,000/- ருபாய்கள் வரை விற்பனை செய்யப்படவுள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon