மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பத்ரிநாத்: 7.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

பத்ரிநாத்: 7.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு உலகம் முழுவதிலிருந்து 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்திற்கு 10 ஆயிரம் அடி உயரத்தில் அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலுக்கு புனிதப் பயணம் செல்வதை இந்துக்கள் கடமையாக கருதுகின்றனர். பத்ரிநாத்தில் 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர்.​​ அந்த ஆண்டில் 9.25 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர்.

இந்தக் கோயிலை பனி மூடிக்கொள்வதால் குளிர் காலம் முழுவதும் கோயில் மூடப்படும். குளிர்காலம் முடிந்த பின், நடை திறக்கப்படும். அதன்படி கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தரிசனத்திற்காகக் கோயில் நடை திறக்கப்பட்டது. குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு செப்டம்பர் 10 ஆம் தேதி கோயில் நடை மூடப்பட்டது. இந்தாண்டு பத்ரிநாத் கோயிலுக்கு 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் 11.50 கோடி ரூபாய் காணிக்கையாக வந்துள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்தாண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கோயில் நிர்வாகி பி.டி.சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon