மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சரிவடைந்த தொழிற்துறை உற்பத்தி!

சரிவடைந்த தொழிற்துறை உற்பத்தி!

இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிடும்போது இது குறைவேயாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 4.5 சதவிகிதம் அதிகரித்திருந்தது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தொழில்துறை உற்பத்தி குறைந்தே காணப்படுகிறது. இந்த நிதியாண்டின் (2016-17) முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 1.7 சதவிகிதமாக உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தொழிற்துறை வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருந்தது. அதேபோல இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 0.2 சதவிகிதம் சரிந்தது.

மொத்தமுள்ள 23 தொழில் குழுமங்களில் 8 தொழில் குழுமங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சி கண்டுள்ளன. தொழில் துறையில் வளர்ச்சி தொகுப்பில் தயாரிப்புத் துறை 77.6 சதவிகிதம் பெற்றுள்ளது. தயாரிப்புத் துறையின் மொத்த மதிப்பு 0.1 சதவிகிதமாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இதன் மதிப்பு 5.3 சதவிகிதமாக இருந்தது" என்று கூறியுள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon