மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மாணவிக்குப் பாலியல் கொடுமை: ஆசிரியர் கைது!

மாணவிக்குப் பாலியல் கொடுமை: ஆசிரியர் கைது!

ஆற்காட்டில் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு (வடக்கு) நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார் கிஷார் அகமது (40). இவர் ஆற்காடு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்த மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தத் தகவல் அறிந்து மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின்போது மாணவிக்கு ஆசிரியர் கிஷார் அகமது பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை ராணிப்பேட்டை மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் 8ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாகப் பள்ளிகளிலேயே மாணவ மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon