மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

நடராசனை சந்தித்த தினகரன்

நடராசனை சந்தித்த தினகரன்

உடல்நலக்குறைவால் சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராசனை அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த சில மாதங்களாக சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராசன் கல்லீரல், சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகிறார். தற்போது நடராசன் சோழிங்கநல்லூரிலுள்ள குளோபல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக லண்டனிருந்து புகழ்பெற்ற மருத்துவர் முகமது ரெலா வரவழைக்கப்பட்டுள்ளார். அதற்காக முன்னரே தமிழக அரசின் உறுப்பு தானம் பெறும் திட்டத்தில் நடராசன் பெயரும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

சிகிச்சை பெற்றுவரும் நடராசனை பார்க்க சசிகலா சிறையிலிருந்து பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலாவின் வருகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் இன்று ( செப்டம்பர் 12) அதிமுகவில் நடைபெற்று வரும் அதிரடிகளுக்கு மத்தியில், சோழிங்கநல்லூரிலுள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நடராசனை, அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon