மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

சர்ச்சையைக் கிளப்பும் பொருந்தாக் காதல்!

சர்ச்சையைக் கிளப்பும் பொருந்தாக் காதல்!

சமூக கோட்பாடுகளுக்கு முரணான திரைக்கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாவது தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்று. தமிழில் வெளியான உயிர், சிந்துசமவெளி போன்ற படங்களில் காட்டப்பட்ட காதல் உறவுகள் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘ஐ ஆம் ரோஷினி’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் ட்ரெய்லர் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கிரெஸ்செண்டோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் ஜெயந்திலால் பாட்டியா இயக்கியுள்ள இந்த படம் அண்ணன், தங்கை இடையில் ஏற்படும் பொருந்தா காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அங்கிதா பாரிஹர் தங்கையாகவும், யாஸ் ராஜ்பாரா அண்ணனாகவும் நடித்துள்ள இப்படத்துக்கு முகமது ஜஃபர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

" ஐ ஆம் ரோஷினி" படத்தின் ட்ரெய்லர் மதுபூர் நகரில் வாழும் அப்பாவித்தனமான பதின்வயது பள்ளி சிறுமியின் வாழ்க்கையை எடுத்துக் கூறுகிறது. அப்பா, அம்மா, அண்ணன், மாமா என்று அளவான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாள் ரோஷினி. மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கும் அவளது வாழ்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் பெற்றோர், காதலித்து ஏமாற்றும் காதலன், காமவெறியோடு தன்னை நெருங்கும் மாமா இவர்களுக்கு மத்தியில் சிக்கி தவிக்கிறாள் ரோஷினி. இந்நிலையில் அவளுக்கு ஆறுதலாக இருந்து அன்புசெலுத்துகிறான் அவளது அண்ணன். இந்த அன்பே பின்னர் காதலாக மாறுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரின் முடிவில் இதுவரையில் இந்திய சினிமாவில் சொல்லப்படாத கதை என்று குறிப்பிட்டுள்ளனர். படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் தாமஸ் " பொருந்தா காதலை மையமாகக் கொண்ட கதை தான், ஆனால் இந்த படத்தில் தவறான காட்சிகள் ஏதும் இடம்பெறவில்லை. ஆதரவாக இருக்கும் அண்ணன் மீது தங்கை வெளிப்படுத்தும் பாசத்தை படமாக்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் மூலம் சமூகத்துக்கு நல்ல கருத்தை சொல்ல இருப்பதாகவும், பெற்றோர்களுக்குக் குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஐ ஆம் ரோஷினி ட்ரெய்லர்

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon