மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் மும்பையின் சார்பாக அவர் களமிறங்குகிறார்.

மறைந்த ஸ்ரீ ஜே.ஒய். லெலே நினைவாக நடைபெறும் 5ஆவது அனைத்திந்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான இன்விடேசனல் ஒருநாள் தொடர் வருகிற 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் 17 வயதாகும் அர்ஜூன் இடம்பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். சச்சின் பேட்டிங்கில் சிறந்து விளங்கியவர். அர்ஜுன் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் வேகப் பந்து வீச்சிலும் திறமையாளர். இவர் இடது கை ஆட்டக்காரர்.

அர்ஜுன் இடம்பெறும் இந்தத் தொடரை பிசிசிஐ நடத்தவில்லை என்றாலும், சிறப்பாகச் செயல்பட்டால் இந்தியாவின் 19 வயதிற்குப்பட்டோருக்கான இந்திய அணியில் அர்ஜூன் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon