மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

2000 பேருக்கு வேலைவாய்ப்பு : இன்ஃபோசிஸ்!

2000 பேருக்கு வேலைவாய்ப்பு : இன்ஃபோசிஸ்!

இன்ஃபோசிஸ் நிறுவனம் வடக்கு கரோலினாவில் புதிதாக அமைக்கவிருக்கும் தொழில்நுட்ப மையத்தில் சுமார் 2000 அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் புதிதாக தொழில்நுட்ப மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் ஒன்றை இன்ஃபோசிஸ் அமைக்கிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான விஷால் சிக்கா, தங்களது அமெரிக்க கிளைகளில் அமெரிக்காவைச் சேர்ந்த 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதன் ஒரு படியாக இந்த அறிவிப்பு வெளியாகியதாகக் கருதப்படுகிறது. இதுவரையில் சுமார் 1,200 அமெரிக்கர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக அமைக்கப்படவிருக்கும் தொழில்நுட்ப மையத்திற்காக 60,000 சதுர அடி அளவிலான நிலத்தைக் கையக ப்படுத்தும் நடவடிக்கையில் இன்ஃபோசிஸ் இறங்கியுள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon