மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

விஜய் சேதுபதி: உழைப்புக்கு தங்கம்!

விஜய் சேதுபதி: உழைப்புக்கு தங்கம்!

உலகாயுதா சார்பில் இயக்குநர் ஜனநாதன் தலைமையில், மக்கள் தொடர்பாளர்களுக்கு நடிகர் விஜய்சேதுபதி நேற்று (செப்டம்பர் 12) தங்கநாணயம் வழங்கினார்.

தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ என்ற அமைப்பு கடந்த தொழிலாளர் தினத்தன்று (மே 1) தமிழ் சினிமாவின் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி கௌரவித்தது. ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம், 100 சவரன் தங்கத்திற்கான செலவை, நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார். முதல்முறையாக திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவிக்கும் விழாவாக அது அமைந்தது.

அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத சினிமா பி.ஆர்.ஓ யூனியன் உறுப்பினர்கள் சிலருக்கு நேற்று (செப்டம்பர் 12) வளசரவாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்தில் தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பி.ஆர்.ஓ. யூனியனைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களான நெல்லை சுந்தர்ராஜன், திரைநீதி செல்வம், வி.பி.மணி ஆகிய மூவருக்கும் நடிகர் விஜய்சேதுபதி தங்கநாணயங்களை வழங்கினார். இந்த விழாவில் உலகாயுதா அமைப்பின் நிறுவனர் ஜனநாதன் உட்பட பி.ஆர்.ஓ. யூனியன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon