மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

ஜப்பானுடன் புதிய ஒப்பந்தங்கள்!

ஜப்பானுடன் புதிய ஒப்பந்தங்கள்!

15 ஜப்பான் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்யவுள்ளன. இதற்காக ஜப்பானுடன் குஜராத் மாநில அரசு ஒப்பந்தம் போடுகிறது.

12ஆவது இந்திய - ஜப்பான் உச்சி மாநாடு நாளை (14.09.2017) குஜராத் மாநிலம் காந்திநகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே இரண்டு நாள் பயணமாக இன்று (13.09.2017) இந்தியா வருகிறார்.

இதுகுறித்து குஜராத் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.தாரா கூறும்போது, "இந்த உச்சி மாநாட்டில் ஜப்பானுடன் புதிதாக 17 முதல் 18 ஒப்பந்தங்கள் வரை போடப்படுகிறது. அதில் 15 நிறுவனங்கள் குஜராத்தில் முதலீடு செய்ய ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளன" என்றார்.

ஜப்பான் பிரதமரின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, 55 ஜப்பான் நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தில் தொழில் நிறுவனங்களைப் பார்வையிட வருகைபுரியவுள்ளனர். இங்கு முதலீடு செய்வதற்கு முன் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் ஜப்பான் நிறுவனங்கள் பார்வையிடவுள்ளன.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon