மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

பால் உற்பத்தித் துறைக்கு நிதி ஒதுக்கீடு!

பால் உற்பத்தித் துறைக்கு நிதி ஒதுக்கீடு!

பால் உற்பத்தித் துறையின் மேம்பாடு மற்றும் உள்கட்டுமான வசதிகளைப் பலப்படுத்தும் வகையில் அத்துறைக்கு மத்திய அரசு ரூ.10,881 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாயன்று பால் உற்பத்தி மற்றும் உள்கட்டுமான மேம்பாட்டு நிதி அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதனால் பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனங்களின் உள்கட்டுமான வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படும். குளிரூட்டும் உள்கட்டமைப்பு மற்றும் மின்னணு வாயிலாகப் பாலின் தன்மையைக் கையாளும் சோதனை உபகரணங்களை நிறுவுதல், உருவாக்கம், நவீனமயமாக்கல் மற்றும் செயலாக்க உள்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் மதிப்பு சேர்க்கப்பட்ட தயாரிப்புகளுக்கான உற்பத்தித் திறன்கள் ஆகியவை இந்த நிதியின் வாயிலாக மேம்படுத்தப்படும்.

இதன் மூலம் வழக்கமான பால் உற்பத்தியை விடக் கூடுதலாக தினசரி 126 லட்சம் லிட்டர் அளவிலான பாலை உற்பத்தி செய்ய இயலும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பால் உலர்த்துதலுக்கான அளவு 210 டன் மற்றும் பால் குளிரூட்டல் அளவு 140 லட்சம் லிட்டரும் அதிகரிக்கும் என்று பால் உற்பத்தித் துறை தெரிவித்துள்ளது.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon