மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

வருகை பதிவின் போது ஜெய்ஹிந்த்!

வருகை பதிவின் போது ஜெய்ஹிந்த்!

அரசுப் பள்ளிகளில் வருகை பதிவு எடுக்கும் போது ‘யெஸ் மேம்/சார்’ என்று கூறுவதற்கு பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ என்று கூற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பிரதேச பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று(செப்,12) கூறியதாவது,” வரும் அக்டோபர் -1 முதல் சாட்னா மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவை எடுக்கும் போது ப்ரசண்ட், யெஸ் மேம்/சார் என்று கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூற வேண்டும். இந்த முறை முதன் முதலாக சாட்னா மாவட்ட பள்ளிகளில் சோதனை அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் ஆலோசித்து மாநிலம் முழுவதும் இதை கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நேற்று சாட்னாவில் நடைபெற்ற ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தின் போது இதனைத் தெரிவித்தார் முன்னதாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தினமும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாட வேண்டும் என்று மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் சிறுவயதில் இருந்தே தேச பக்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசபக்தி தொடர்பான விஷயம் என்பதால் இதை அனைத்துப் பள்ளிகளும் கண்டிப்பாகப் கடைபிடிக்கும் என்று நம்புவதாக விஜய் ஷா கூறியுள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon