மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

வாட்ஸ்அப் வடிவேலு 8: நாம் அனைவரும் காந்தியே!

வாட்ஸ்அப் வடிவேலு 8: நாம் அனைவரும் காந்தியே!

காந்தி கணக்கு என்றால் என்ன தெரியுமா?

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட ‘நாமம்’ என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, ‘காந்தி கணக்கு’ என்று எங்களுக்குப் புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

#திரும்ப வராத கடனுக்கு அந்த பெயரை நாம் வழக்கப்படுத்திக்கிட்டோம்.

நாம் அனைவரும் காந்தியானதும் நம் கணக்கில் வரவு வைக்கப்பட்டவை எல்லாம் இருப்பதை மக்கள் ஏனோ உணரவில்லை. அதே யுக்தியை கொஞ்சம் மாறுபடுத்தி, சிலர் மக்களுக்கு நேரடியாக நிதி உதவி செய்ய முடியவில்லை என்பதால் சில பல அதிகாரப் பொறுப்புகளுக்கு வந்து, எப்படியெல்லாமோ நிதிகளை திரட்டி, அவற்றில் தன் கணக்குக்கு வேண்டியவற்றை ஒதுக்கி, மக்களின் கணக்கில் சில பல நலத்திட்டங்களும் நிதியுதவிகளும் சென்றடைவதால் நாம் அனைவரும் காந்தியே!

தொடரும்...

- கிரேஸி கோபால்

வாட்ஸ்அப் வடிவேலு 1

வாட்ஸ்அப் வடிவேலு 2

வாட்ஸ்அப் வடிவேலு 3

வாட்ஸ்அப் வடிவேலு 4

வாட்ஸ்அப் வடிவேலு 5

வாட்ஸ்அப் வடிவேலு 6

வாட்ஸ்அப் வடிவேலு 7

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon