மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

செப்டம்பர் 13: கடலை தினம்! #Peanutday

செப்டம்பர் 13:  கடலை தினம்!  #Peanutday

வாட்ஸ்அப் குரூப்ல, ஃபேஸ்புக்ல புதுசா நண்பர்களைச் சேர்க்க பயமா இருக்கு. பசங்க ஏதாச்சும் கேட்டா பதில் வராது. பெண்கள் கேட்டா பின்கோடு, அட்ரஸோட பதில் வரும் பாருங்க. அதுவும் நம்ம லிஸ்ட்டுல உள்ள பொம்பள புள்ளைங்களுக்காக தேடித்தேடி போய் கமெண்ட் கொடுக்கறதென்ன, லைக் போடறதென்ன...

“அப்பறம், சாப்பிட்டியா செல்லம், ம்ம்ம்... நீதான் சொல்லணும், அப்பறம்...” இதே வார்த்தைகள் தொடர்ச்சியாகவும் சில பல வாட்ஸ்அப் ஸ்மைலி ஸ்டிக்கர்களுடன் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தால், அவ்விடத்தில் கடலை பயிரிடப்படுகிறது என அர்த்தம்.

‘ஆமா... இது உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம்தானே... இப்ப எதுக்கு வடிவேலு?’ என நீங்கள் கேட்டால்... (பயபுள்ள அதான் டெய்லி செஞ்சிக்கிட்டு இருக்கு போல)

அதற்கான விடை, இன்று ‘கடலை தினம்’ (Peanut Day) என்பதாகும்.

சரி... நிஜமான கடலையைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு வருவோம்.

நடு தென் அமெரிக்காவே இதன் பிறப்பிடமாகும். இன்று இந்தியா, சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

வழக்கத்தில் வேர்க்கடலை, நிலக்கடலை, மணிலாக்கடலை, மணிலாக்கொட்டை (மல்லாட்டை) என்றெல்லாம் சொல்வார்கள்.

வேர்க்கடலை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதிலுள்ள கொழுப்பு சத்துதான். அது நல்ல கொழுப்பு. உடலுக்கு தேவையான கொழுப்பு. 30 வகையான சத்துகள் வேர்க்கடையில் உள்ளன. சர்க்கரை வியாதிக்காரர்களும் சாப்பிடலாம்.

வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்துக்கு, இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.

வேர்க்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கவும் இது பயன்படுகிறது. வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. வேர்க்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடண்ட் நோயிலிருந்து பாதுகாப்பதோடு இளமையையும் பராமரிக்கச் செய்கிறது. வேர்க்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது. வேர்க்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

“அதெல்லாம் சரி வடிவேலு... நிறைய சத்தெல்லாம் இருக்கு, கிட்னில இருந்து சட்னி வரைக்கும் கடலை நல்லதுதான் ஒப்புக்கிறேன். ஆனா, இந்த கடலை போடுறதுக்கும், இந்த கடலைக்கும் என்ன சம்பந்தம்?”

அப்படின்னு யாரோ ஒருத்தரோட மைண்ட் வாய்ஸ்...சோ சத்தமா கேக்குது. சொல்றேன்.

இது இப்பதான், ஒரு 20-25 வருஷமா தான் சொல்லிகிட்டு இருக்கோம்.

பீச்ல கடலை வண்டி போகும். உள்ள கடலையே இருக்காது. வெறும் மணல வறுத்துக்கிட்டு இருப்பாங்க. அப்புறம் ட்ரம்ஸ் சிவமணியே மிஞ்சிற அளவு ட்யூனெல்லாம் போடுவாங்க. சுத்தி இருக்கவங்க கவனத்த திருப்பணும். அதற்காக வெறும் மணலையே வறுத்தாலும் கடலை வறுப்பது / விற்பது போன்று காட்டுவார்கள். அதே போல, விஷயமே இல்லைன்னாலும் எதையாவது நம்மாளுங்க பேசிக்கிட்டு இருக்கிறதுக்குதான், ‘கடலை போடுறது / கடலை வறுக்கிறது’ அப்படின்னு சொல்றாங்க.

“பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, வியாதியைத்தரும் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்குப் பதில், மருத்துவ குணமுள்ள, இயற்கையான கடலையை சாப்பிடுவதன் மூலம் விவசாயத்தை காப்போமே ப்ரண்ட்ச்ச்ச்... அல்லது ஓர் ஏழையை வாழ வைப்போமே ப்ரண்ட்ச்ச்ச்...” அப்படின்னு நமக்கு ஏற்கெனவே பல தடவை வாட்ஸ்அப்பில் பார்வேர்ட் மெசேஜ் வந்திருக்கும். அதனால நான் தனியா சொல்லத்தேவையில்ல.

சரி, கடலையை வாங்கி சாப்பிட்டுக்கிட்டே ‘கடலை போடலாம்’ வாங்க...

#கடலை தின நல்வாழ்த்துகள்

#Happy Peanutday

- கிரேஸி கோபால்

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon