மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

செல்வராகவன் படத்தில் விருது கேரண்டி!

செல்வராகவன் படத்தில் விருது கேரண்டி!

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதன்பிறகு ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் குமுதா கேரக்டர் மூலம் அனைவராலும் அறியப்பட்ட முகமானார். செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்திருக்கும் இவர், ‘செல்வராகவன் படத்தில் நடித்தால் விருது நிச்சயம்’ என்று கூறியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து ரிலீஸூக்காக காத்திருக்கிறது. இயக்குநர் செல்வராகவன் பற்றி நந்திதா, “செல்வராகவன் மிகவும் எளிமையான மனிதர். இவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும்போது என்னிடம் எல்லோரும் இவர் ரொம்ப ஸ்ட்ரிக்டான இயக்குநர் என்றனர். நானும் பயந்துகொண்டே தான் நடிக்கப் போனேன். ஆனால், நடிப்பைச் சிறந்த முறையில் சொல்லிக்கொடுத்தார். என்னுள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வந்தார். இந்தப் படத்தை நடித்து முடித்த பிறகு ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். அதற்காக எனக்கு விருது கிடைத்தது. அதற்குக் காரணம் இவர் இயக்கத்தில் நடித்ததுதான். எப்போதும் நான் இயக்குநர்களின் நாயகிதான்” என்று தெரிவித்துள்ளார்.

அரவிந்த் சாமியுடன் இணைந்து ‘வணங்கா முடி’ படத்தில் நடித்து வரும் நந்திதா, “பல கதைகளை கேட்டு நிராகரித்த பின்பு இந்தப் படத்தை தேர்வு செய்தேன். இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் தோன்றுகிறேன். இதுவரை பார்க்காத நந்திதாவை இந்தப் படத்தில் காணலாம்” என நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon